பல நோய்களை விரட்டும் மருந்து குழம்பு பொடியை எப்படி செய்யனும் தெரியுமா.?

By Ishvarya Gurumurthy G
14 May 2024, 19:14 IST

வியாதிகளை விரட்டி, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மருந்துக் குழம்பு செய்வதற்கான பொடியை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

மருந்து குழம்பை மாதம் ஒரு முறை கட்டாயம் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்தால், சளி, இருமல், உடம்பு வலி போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கிராமத்தில் செய்யப்படும் இந்த மருந்து குழம்பு பொடியை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

மருந்து குழம்பு பொடிக்கு தேவையான பொருட்கள்

சீரகம், ஓமம், வால் மிளகு, கண்டந்திப்பிலி, மஞ்சள் தூள், சுக்கு, சித்தரத்தை, இந்துப்பு, சதகுப்பை

செய்முறை

சீரகம், ஓமம், வால் மிளகு, கண்டந்திப்பிலி, மஞ்சள் தூள், சுக்கு, சித்தரத்தை, இந்துப்பு, சதகுப்பை அனைத்தையும் சட்டியில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை கற்றுபுகா டப்பாவில் அடைக்கவும். இது 6 மாதம் வரை அப்படியே இருக்கும்.

மருந்து குழம்பு பொடி செய்வதற்கான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த பொருட்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

வழக்கமாக புளிக்குழம்பு செய்வது போல் தான் மருந்து குழம்பும். புளிக்குழம்பு செய்வது போல் எல்லாவற்றையும் சேர்த்து, அதனுடன் இந்த மருந்து குழம்பு பொடியை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான், மருந்து குழம்பு ரெடி.