எப்பவுமே முட்டையை ஒரே மாதிரி செய்து கொடுத்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை முட்டையை வைத்து பீட்சா செய்து கொடுங்க. வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்ய சொல்லுவாங்க. இதோ ரெசிபி.
தேவையான பொருட்கள்
முட்டை - 6, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பூண்டு - 1 தேக்கரண்டி துருவியது, ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தக்காளி
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை - சிறிதளவு நறுக்கியது, சீஸ் - 6 துண்டு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ்.
செய்முறை படி - 1
முதலில் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், துருவிய பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
செய்முறை படி - 2
பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு முட்டை கலவையை ஊற்றவும்.
செய்முறை படி - 3
பின்பு நறுக்கிய தக்காளி துண்டுகளை முட்டையின் மீது வைத்து அதன் மேல் சிறிதளவு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவவும்.
செய்முறை படி - 4
அடுத்து மீதம் உள்ள முட்டை கலவையை தக்காளியின் மீது ஊற்றவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி மூடி வைத்து வேகவிடவும்.
செய்முறை படி - 5
முட்டை வெந்ததும் அதன் மேல் சீஸை துருவி விடவும். கடைசியாக இட்டாலியன் சீசனிங் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவி கடாயை மூடி சீஸ் உருகும் வரை 3 நிமிடம் வேகவிடவும். முட்டை பீட்சா தயார்!