யாருக்குத்தான் லட்டு பிடிக்காது. நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1/4 கப், பொட்டு கடலை - 1/4 கப், அவல் - 1 கப் (250 மி.லி கப்), நெய், முந்திரி, திராட்சை, தண்ணீர் - 3/4 கப், வெல்லம் - 3/4 கப், துருவிய தேங்காய் - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
செய்முறை படி - 1
முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
செய்முறை படி - 2
இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும். பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
செய்முறை படி - 3
வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும். வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
செய்முறை படி - 4
பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
செய்முறை படி - 5
பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும். கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும். சுவையான அவல் லட்டு தயார்.