கந்த சஷ்டி விரதம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் 6 அல்லது 7 நாள்கள் விரதமுறையாகும். இதில் பல விரத முறைகளை அடிப்படையாகக் கொண்டு சிலர் 6 அல்லது 7 நாள்களும் விரதம் இருப்பர். இதில் விரதத்தின் போது உடலை நீரேற்றமாக வைக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்
தண்ணீர் அருந்துவது
விரத நேரத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, விடியற்காலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், வெதுவெதுப்பான அல்லது சூடான நீர் அருந்துவதை முயற்சிக்கலாம்
தேங்காய் நீர் குடிப்பது
தேங்காய் நீர் ஆனது பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ள இயற்கையான ஐசோடோனிக் பானமாகும்
சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது
விரத காலத்தில் சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், சர்க்கரை பானங்கள் விரதத்தை சீர்குலைக்கலாம்
நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்
தர்பூசணி, ஆப்பிள், வெள்ளரிகள், அவுரிநெல்லிகள் போன்ற அதிக திரவம் நிறைந்த பழங்கள் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மேலும் உலர்ந்த பழங்களை உட்கொள்ளலாம்
காஃபினைத் தவிர்ப்பது
விரகாலத்தில் காஃபினைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் இது நம் உடலில் நீரிழப்பை ஏற்படச் செய்யலாம்