பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க இதை சாப்பிடவும்..

By Ishvarya Gurumurthy G
24 Jul 2024, 08:30 IST

பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்க முடியும்.

மாதுளை

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மேலும் இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பப்பாளி இலைகள்

பப்பாளி பழம் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இதில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பீட்ரூட்

சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட், உடலில் இரத்த அளவை அதிகரிக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவோருக்கு கேரட் மற்றும் பீட்ரூட் சாறு நல்ல பலனைத் தரும்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு அவசியமானது. வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, கிவி, கீரை, நெல்லிக்காய், ப்ரோக்கோலி, தக்காளி மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடுவது, பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் கே உணவுகள்

வைட்டமின் கே நிறைந்த உணவுகளும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழம், முட்டை, கீரைகள், கல்லீரல், இறைச்சி, முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

வைட்டமின் பி-12 உணவுகள்

இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி-12 சார்ந்த உணவுகள் உதவுகிறது. இந்த வைட்டமின் சத்து விலங்குகள் சார்ந்த உணவாகும். மாட்டிறைச்சி, முட்டை போன்றவற்றில் வைட்டமின் பி-12 காணப்படுகிறது.

நெல்லிக்காய்

ஆம்லா எனப்படும் பெரிய நெல்லிக்காய், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த பழமாகும். இது பிளேட்லெட்டுகள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், நோயெதிர்ப்புச் சக்தியாகவும் உள்ளது. இந்த நெல்லிக்காய் சாற்றை தினந்தோறும் குடித்து வர, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காணலாம்.