மழைக்காலத்தில் உடல் ஆற்றல் என்பது குறைவாகவே இருக்கும். இதை அதிகரிக்கும் சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
போதுமான தூக்கம் என்பது மிக முக்கியம். நல்ல தூக்கம் என்பது பல உடல்நல பிரச்சனைகளையும் மனநல பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவும்.
வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க, உங்கள் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சேர்க்க வேண்டும். இது எடை அதிகரிப்பு பிரச்சனையை தடுக்க உதவுகிறது.
லேசான நடை, யோகா அல்லது கார்டியோ உடற்பயிற்சியுடன் உங்கள் தினத்தை தொடங்குங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
கிரீன் டீ உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. க்ரீன் டீயை உட்கொள்வது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இதய பிரச்சனைகள், டைப் 2 நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய நட்ஸ் வகைகள் உதவும்.