தற்போதெல்லாம் மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு சந்தை படுத்தப்படுகிறது. இதனை கண்டறிய சில எளிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
தண்ணீர் சோதனை
நீங்கள் மாம்பழத்தை தண்ணீரில் போட்டு சோதை செய்யலாம். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்காது.
நிறத்தில் மாற்றம்
மாம்பழம் தோல் பளபளப்பாகவும், அடர் மஞ்சள் நிறத்திலும் இருந்தால் அது பழுக்க வைத்த மாம்பழம் என்பதை அறியலாம். இது இரசாயனத்தின் விளைவாக ஏற்படும்.
அசாதாரண வாசனை
மாம்பழம் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால், அவை இனிமையான வாசனையை கொண்டிருக்கும். இதுவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்தால் அவை இரசாயனம் அல்லது அசாதாரண வாசனையை கொண்டிருக்கும்.
பதம்
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் அதீத மென்மையாக இருக்கும். இது இரசாயனத்தால் செல் சுவர் பலவீனமடையும் போது ஏற்படும். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் பொதுவாக உறுதியான அமைப்பை கொண்டிருக்கும்.
சேதம்
மாம்பழம் பழுக்க வைக்கப்படும் போது, இரசாயணம் காரணமாக மாம்பழம் மீது புள்ளிகள் அல்லது கரைகள் ஏற்படலாம்.
சுவை
இயற்கையாக பழுத்த பழம் இனிமையான ருசியை கொண்டிருக்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைத்த பழத்தில் ருசி அந்த அளவுக்கு இருக்காது.
கார்பைடு சோதனை
மாம்பழம் தோலில் கரும்புள்ளிகள் இருந்தால், அவை கால்சியம் கார்பைடிலிருந்து உருவாகும் அசிட்டிலீன் வாயுவைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிரிப்பதை அறியலாம்.