வலுவான எலும்புகளை பராமரிக்கவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் வைட்டமின் டி அவசியம்.
மழைக்காலத்தை முழுமையாக அனுபவிக்க இந்த வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.
சூரிய ஒளி வைட்டமின் Dன் நல்ல மூலமாகும். இதற்கு அவ்வப்போது சூரிய ஒளியில் வெளியில் சென்று வாருங்கள்.
கொழுப்பு மீன், முட்டையின் மஞ்சள் கரு, வலுவூட்டப்பட்ட பால், காளான் ஆகியவைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காட் லிவர் ஆயில், தாவர அடிப்படையிலான பால் அதாவது சோயா பால், பாதாம் பால், அல்லது ஓட் பால் ஆகியவையை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த உணவுகள் பெரிதும் முக்கியம். ஏதேனும் தீவிர ஆரோக்கிய நிலையை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.