தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே.
கோடைக்காலத்தில் நாம் விரும்பி சாப்பிடும் பழமாக தர்பூசணி திகழ்கிறது. நீர்சத்தின் சிறந்த மூலமாக இது திகழ்கிறது. ஆனால், இதனை சிவப்பு நிறமாக மாற்ற ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுகிறது. இது உடலுக்கு நல்லதல்ல.
தர்பூசணியில் கலக்கப்படும் ரசாயனம் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது தலைவலி, தோல் வெடிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை கண்டறிவது எப்படி என்று இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மேற்பரப்பில் மாற்றம்
தர்பூசணி மேற்பரப்பில் பழுப்பு நீர் அல்லது நுரை போன்றவற்றை கண்டால், அந்த பழத்தை வாங்க வேண்டாம். அதில் ரசாயனம் கலந்திருக்கலாம்.
டிஷ்யூ சோதனை
தர்பூசணியை வெட்டி, அதன் மீது டிஷ்யூ பேப்பரை வைத்து சிறிது நேரத்திற்கு அப்படியே விடவும். டிஷ்யூவை எடுத்ததும், அதில் சிவப்பு நிறம் படிந்திருந்தால், தர்பூசணியில் ரசாயனம் கலந்திருப்பதாக அர்த்தம்.
பழத்தின் தோற்றம்
நீங்கள் சந்தையில் இருந்து தர்பூசணி வாங்கி வந்த பின், அதனை வெட்டி, அதனுள் விரிசல் அல்லது ஓட்டை உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த பழத்தில் விரிசல் மற்றும் ஓட்டை இருந்தால், அது ரசாயனம் செலுத்தப்பட்ட பழம் என்று அர்த்தம்.
நீர் சோதனை
தர்பூசணியை வெட்டி சிறிது நேரம் நீரில் போட்டு வைக்கவும். தண்ணீர் சிவப்பு நிறமாக இருந்தால், தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதாக அர்த்தம்.
சுவையில் கவனம்
தர்பூசணி வெளியில் பச்சை நிறமாகவும், உள்பக்கம் வெள்ளை நிறமாகவும் இருந்து, அது இனிப்பு சுவை கொண்டிருந்தால், அவை சுவையூட்டப்பட்ட பழம்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளை செய்து, நீங்கள் வாங்கியுள்ள தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளவும்.