வெயில் காலத்தில் நம்மில் பலர் சப்ஜா விதைகளை உணவில் எடுத்து கொள்வோம். இது உடலை வெயிலில் இருந்து பாதுகாக்கும். இதில், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இதில் ஏராளமாக உள்ளது. இதை எப்படி சாப்பிட்டால் இதன் முழுமையான பலனை பெறலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எடை குறைய
சப்ஜா விதைகள் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக பசியை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
தோலுக்கு நல்லது
சப்ஜா விதைகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில், உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
சிறந்த செரிமானம்
சப்ஜா விதைகளை உட்கொள்வதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை
சப்ஜா விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். பாலில் ஊறவைத்து காலை உணவாக சாப்பிடலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
முடிக்கு நன்மை பயக்கும்
முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்க சப்ஜா விதைகளை உட்கொள்ளலாம். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது, இது முடியை வலுப்படுத்தும்.
சப்ஜா விதையை எப்படி சாப்பிடணும்?
1 தேக்கரண்டி சப்ஜா விதைகளை 1/2 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும். இதன் பிறகு 1 எலுமிச்சை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
பாலுடன் உட்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க விரும்பவில்லை என்றால் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். அதே நேரத்தில், உடல் எடையை குறைக்க, வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை தண்ணீருடன் சாப்பிடுங்கள்.