ஆப்பிளை எப்படி சாப்பிடனும்? தோலுடன் அல்லது தோல் நீக்கி?

By Devaki Jeganathan
17 Dec 2024, 10:53 IST

ஆப்பிள் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு விலைமதிப்பற்றவை. இதில் தண்ணீர், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், பல நோய்களில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. ஆப்பிளை எப்படி சாப்பிடணும்? என தெரிந்து கொள்ளுங்கள்.

தோலுடன் ஆப்பிள் சாப்பிடலாமா?

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தோலில் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

சாப்பிடுவதற்கு முன் சுத்தம்

தற்போது ஆப்பிளில் ரசாயனங்கள் அல்லது மெழுகு பயன்படுத்தப்படுகிறது. சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். இது ரசாயனங்களை நீக்கி ஆப்பிளை பாதுகாப்பாக வைக்கிறது.

ஆப்பிள் எப்போது சாப்பிட வேண்டும்?

பகலில் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால், அதன் சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்படுகிறது. ஆப்பிள் இரவில் சாப்பிடக்கூடாது.

பால் மற்றும் ஆப்பிள்

காலை உணவாக பாலுடன் ஆப்பிளை சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த ஊட்டச்சத்து நிரம்பிய காலை உணவு உங்கள் நாளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.

ஏன் இரவில் ஆப்பிள் சாப்பிடக்கூடாது?

இரவில் ஆப்பிள் சாப்பிடுவது தூக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில், அதில் உள்ள சில கூறுகள் உடலை சுறுசுறுப்பாக மாற்றும்.

எவ்வளவு ஆப்பிள் சாப்பிட வேண்டும்?

நீங்கள் நாள் முழுவதும் ஒன்று அல்லது அரை ஆப்பிள் சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

அதிகமாக ஆப்பிள் சாப்பிடுவதன் தீமைகள்

அதிகளவு ஆப்பிள் சாப்பிடுவதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது தொண்டை, நாக்கு, உதடுகள் அல்லது முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, குறைந்த அளவில் மட்டுமே இதை உட்கொள்ளவும்.