பாதாமை இப்படி எடுத்துக்கிட்டா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்

By Gowthami Subramani
05 Feb 2024, 09:51 IST

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளில் பாதாமை சேர்க்கலாம். அன்றாட வாழ்க்கையில் பாதாமை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்

பச்சை மற்றும் உப்பு சேர்க்காத

பாதாம் பருப்பை பச்சையாகவும், உப்பு சேர்க்காததாகவும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். பச்சை பாதாம் புரதம், நார்ச்சத்துக்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த இயற்கையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது

ஆற்றலைத் தர

பாதாம் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதற்கு பாதாமை துருவிய தேங்காய், பேரீச்சம்பழம் மற்றும் தேன் போன்றவற்றைக் கலந்து எடுத்துக் கொள்ளலாம்

வறுத்த காய்கறிகளுடன்

காய்கறிகளை வறுக்கும் போது அதில் பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிடலாம். காய்கறிகளை சமைத்த பிறகு கடைசி சில நிமிடங்களில் முழுவதும் அல்லது வெட்டப்பட்ட பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்

முழு தானிய டோஸ்ட்டில்

வழக்கமான வெண்ணெய்க்குப் பதிலாக பாதாம் வெண்ணெயைத் தேர்வு செய்யலாம். இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையானது காலை முழுவதும் நிறைவாக மற்றும் திருப்தியாக வைக்க உதவுகிறது

தயிருடன் பாதாம்

கிரேக்க தயிருடன் பிடித்த பழங்களைச் சேர்ப்பதுடன் பாதாமை சேர்த்துக் கொள்ளலாம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பதுடன் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது