அதிக நேரம் பசியுடன் இருப்பது ஜங்க் ஃபுட் மீதான ஆர்வத்தை தூண்டும். எனவே வழக்கமான உணவு அட்டவணையை பராமரிக்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
இந்த பானங்கள் வேண்டாம்
சோடா, கார்பனேற்றப்பட்ட பானங்கள், எனர்ஜி ட்ரிங்ஸ்,தேநீர் போன்ற இனிப்பு பானங்கள் எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே இவற்றை சாப்பிடுவதற்கு முன்போ,பின்போ எடுத்துக்கொள்ளக்கூடாது.
உணவுக்கு இடையில் பசியாக உணர்கிறீர்களா? புதிய பழம் அல்லது காய்கறி சாலட்களை ஹம்மஸுடன் சிற்றுண்டியாக உட்கொள்ளுங்கள்.
குறைவான கலோரி
கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். இதில் குறைந்த கொழுப்பு, உப்பு அல்லது சர்க்கரை உள்ளது. இரண்டு வேளைகளுக்கு இடையில் சாப்பிடும் ஆரோக்கியமான சிற்றுண்டி வயிறு மற்றும் மூளைக்கு திருப்தி அளிக்கிறது.
நார்ச்சத்து உணவுகள்
ருசியான நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால்,உடனடியாக அதனை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் உரையாடுவது, வாக்கிங், தியானம் போன்றவற்றை முயற்சிக்கலாம்.
சிந்தனையை மாற்றுங்கள்
ருசியான நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால்,உடனடியாக அதனை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் உரையாடுவது, வாக்கிங், தியானம் போன்றவற்றை முயற்சிக்கலாம்.