வெயில் காலத்தில் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கனும் தெரியுமா.?

By Ishvarya Gurumurthy G
06 Jun 2024, 13:15 IST

கோடையில் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படலாம். கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இங்கே காண்போம்.

தண்ணீர் அளவு

கோடையில் நீங்கள் ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறைவான தண்ணீர் குடிப்பதால் என்ன ஆகும்?

கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால், பல கடுமையான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தலைசுற்றல், தொண்டை வறட்சி, தோல் வறட்சி, சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.

கோடையில் தவிர்க்க வேண்டியவை

கோடை காலத்தில் சில பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை உட்கொள்வதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும்.

மசாலா வேண்டாம்

கோடையில் பொரித்த மற்றும் சூடான மசாலாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது வெப்பத்தில் தீங்கு விளைவிக்கும்.

பழங்கள்

பருவகால பழங்களை உட்கொள்ள வேண்டும். இது தண்ணீர் பற்றாக்குறையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.