அதிக உப்பு நிறைந்த எந்த உணவும் கடுமையான தாகத்தைத் தூண்டும். ரத்தத்தில் சோடியம் அதிகரிப்பதை உணர்ந்து, சிறுநீரகம் மற்றும் மூளையில் உள்ள சுரப்பிகள் தாக உணர்வைத் தூண்டுகின்றன. இதனால் கட்டுக்கடங்காத தண்ணீர் தாகம் ஏற்படக்கூடும்.
வயிற்று உபசம்
நீங்கள் அதிக அளவு உப்பை உண்ணும் போது இரத்தத்தில் சோடியம் அளவு அதிகரிக்கும், இது உடலில் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் வயிறு, முகம் வீங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.
அதிக அளவில் உப்பு சாப்பிடுவது உடனடியாக உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் சிலருக்கு ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறியான தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறுநீரக கற்கள்
அதிகப்படியான உப்பை தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் அதிக உப்பு சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட்டுகள் அல்லது யூரிக் அமிலத்துடன் இணைந்து படிகங்களை உருவாக்குகின்றன.
சரும அழற்சி
எக்ஸிமா போன்ற தோல் அரிப்பு நோய்களுக்கு அதிகப்படியான உப்பு நுகர்வு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதாவது அதிகப்படியான உப்பை உட்கொள்வது டி-செல்களை வெளியிட நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இது எக்ஸிமா, கீழ்வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.