ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிட வேண்டும்?

By Devaki Jeganathan
29 May 2024, 10:30 IST

அனைவரும் உலர் பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, முந்திரி பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. இதன் சுவையை போல ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

தினமும் முந்திரி சாப்பிட்டால்

முந்திரி பருப்பை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

நல்ல தூக்கம்

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்தால், முந்திரி இதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில், உள்ள மெக்னீசியம் தூக்க பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை

முந்திரி பருப்பை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், உடலில் மலச்சிக்கல், அசிடிட்டி பிரச்னை இருக்காது. தவிர, வயிற்று உப்புசம் பிரச்சனையையும் குறைக்கிறது.

எவ்வளவு முந்திரி சாப்பிடனும்

முந்திரியை அதிகமாக சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு ஒரு நாளைக்கு 5 முந்திரி சாப்பிடலாம். இதை விட அதிகமாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

கோடையில் முந்திரி சாப்பிடலாமா?

கோடை காலத்தில் முந்திரியை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். முந்திரி இயற்கையிலேயே சூடாக இருப்பதாலும், அதிகமாக சாப்பிடுவதாலும் வயிற்றில் கோளாறு ஏற்படும்.

எலும்புகளை வலுப்படுத்தும்

முந்திரியில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இது நிச்சயமாக உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கண்களுக்கு நல்லது

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, அதன் வழக்கமான பயன்பாடு முடியை கருப்பாக வைத்திருக்க உதவுகிறது.