பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.
சரும பராமரிப்பு
பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் ஏற்படக்கூடிய காயங்களை உடனடியாக சரிய செய்யக்கூடியது. கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், ரேஷ்கள், வீக்கம் போன்ற அழற்சி பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது.
வயிற்று பிரச்சனைகள்
பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
ஆன்டி ஏஜிங்
சருமத்தை ஃப்ரி ரேடிக்கல்கள்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த ஃப்ரி ரேடிக்கல்களே இளம் வயதிலே வயோதிக தோற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக உள்ளன.
எவ்வளவு சாப்பிடலாம்?
இதனை அதிகம் சாப்பிட்டால், மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே உட்கொள்ள வேண்டும். எனவே குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.