அன்றாட உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்குப் போதிய அளவில் நன்மைகளைத் தருகிறது
சர்க்கரை நோய்
அதிகம் விரும்பி எடுத்துக் கொள்ளும் பழ வகைகளில் வாழைப்பழமும் ஒன்று. இதில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனினும், அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவது சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது
சிறுநீரக நோய்
அதிகளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்வது சிறுநீரக நோய், இதய நோய் போன்ற அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
இதய பாதிப்பு
அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது, பொட்டாசியம் அளவை அதிகரிக்கிறது. இது ஹைபர்கேமியா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனையை உருவாக்கலாம்
சமச்சீர் விகிதத்தில்
மற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைப் போல, சமச்சீரான விகிதத்தில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்
எடை மேலாண்மைக்கு
வாழைப்பழத்தை சரியான அளவு உட்கொள்வதன் மூலம் எடையை நிர்வகிக்கலாம். இதன் மூலம் எடை பருமன், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட அபாயத்தைக் குறைக்கலாம்
ஆற்றலைத் தக்க வைக்க
வாழைப்பழத்தில் வைட்டமின்கள் பி, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் ஆற்றலைத் தக்க வைக்க உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த ஆதாரங்களில் வாழைப்பழமும் அடங்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது
புற்றுநோய் பாதிப்பைத் தடுக்க
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கிறது