குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் புரோபயாடிக்குகள் முக்கியம் தெரியுமா?

By Gowthami Subramani
22 Jan 2025, 13:22 IST

புளித்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்களில் உள்ள புரோபயாடிக்குகள் ஆனது நன்மை பயக்கும் பாக்டீரியா வகையாகும். இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாடிக்குகள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

எடை மேலாண்மைக்கு

சில புரோபயாடிக்குகள் உள்ள உணவுகள் வயிறு நிறைந்த உணர்ந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது எடையிழப்பை ஆதரிக்கவும், எடை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

புரோபயாடிக்குகள் குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்துகிறது. இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவ பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான செரிமான சூழலை ஆதரிப்பதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது

உணவு உணர்திறனைக் குறைக்க

புரோபயாடிக்குகள் குடல் புறணியை சரிசெய்யவும், வீக்கத்தைக் குறைக்கவும், குடல் செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது. இது உணவு உணர்திறன் அல்லது சகிப்புத்தன்மைக்கான அறிகுறிகளைக் குறைக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி குடலில் உள்ளது. புரோபயாடிக்குகள் குடல் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. இது உடல் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த

குடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. நல்ல குடல் ஆரோக்கியம் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறடு. புரோபயாடிக்குகள் செரடோனின் போன்ற நரம்பியல் கடத்திகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்த அறிகுறிகளைக் குறைக்கிறது

புரோபயாடிக் உணவுகள்

அன்றாட உணவில் தயிர், கிம்ச்சி அல்லது ஊறுகாய் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அல்லது உயர்தர புரோபயாடிக் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன் இந்த நன்மைகள் அனைத்தையும் வழங்குகிறது