புகையிலை பயன்பாட்டை நிறுத்த பலர் சிரமப்படுகிறார்கள். புகையிலை பயன்பாட்டை நிறுத்த விரும்பினால் இந்த வழிகள் பயனுள்ளதாக இருக்கும்.
நிகோடின் மாற்று சிகிச்சை முறை குறித்து சுகாதார வழங்குநரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மூக்கு ஸ்ப்ரே, இன்ஹேலரில் நிக்கோடின், நிக்கோடின் பேட்ச்கள், போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
புப்ரோபியன், வரெனிக்லைன் போன்ற நிகோடின் அல்லாத புகைபிடிப்பதை நிறுத்தும் மருந்துகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிகோடின் கம், லோசன்ஜ்கள், நாசி ஸ்ப்ரேக்கள் அல்லது இன்ஹேலர்கள் போன்ற குறுகிய-செயல்படும் நிகோடின் மாற்று சிகிச்சைகளை பயன்படுத்தலாம்.
மன அழுத்தத்தை உணரும் சமயத்தில், காபி பருகும் போது புகையிலை தூண்டுதல் வலுவாக இருக்கலாம். அப்படி தூண்டுதல் பொருளை கண்டறிந்து அதையும் தவிர்ப்பது நல்லது.
வாயில் வேறு ஏதாவது மெல்லலாம். சர்க்கரை இல்லாது சூயிங்கம், பச்சை கேரட், நட்ஸ், சூரியகாந்தி விதை உள்ளிட்ட ஆரோக்கிய பொருளை வாயில் போட்டு மெல்லலாம்.