குளிருக்கு இதமா கொள்ளு சூப் - எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்!

By Kanimozhi Pannerselvam
25 Nov 2024, 09:05 IST

முதல் நாள் இரவே 1 கப் கொள்ளை தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுத்த நாள், ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த கொள்ளு பருப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். மூடியை மூடி 6-7 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விடவும்.

சிறிது இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

இப்போது வேகவைத்து மசித்து வைத்துள்ள கொள்ளை சேர்த்து, கடாயை மூடி 2-3 நிமிடங்கள் வேக விடவும். தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.