அதிகளவிலான யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் இன்னும் பிற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனினும், அதிக யூரிக் அமிலத்தை இயற்கையாகவே சில பானங்களின் உதவியுடன் குறைக்கலாம். இதில் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பானங்கள் சிலவற்றைக் காணலாம்
எலுமிச்சை நீர்
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பானமாகும். இது உடலில் யூரிக் அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் கரைக்க உதவுகிறது
செலரி சாறு
செலரியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இந்த சாறு அருந்துவது உடலை நச்சு நீக்க உதவுகிறது. மேலும் இது சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கவும், யூரிக் அமிலத்தை நீக்கவும் உதவுகிறது
ஆப்பிள் சைடர் வினிகர்
இதில் அசிட்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை யூரிக் அமிலத்தை உடைத்து சிறுநீரகங்கள் வழியாக அதை வெளியேற்ற உதவுகிறது. கூடுதலாக இது உடலின் pH அளவை சமநிலைப்படுத்தி, யூரிக் அமிலக் குவிப்பைக் குறைக்கிறது
வெள்ளரி சாறு
வெள்ளரிகளில் குறைந்த பியூரின்கள், அதிகளவு நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கான சிறந்த பானமாக அமைகிறது. இந்த சாறு அருந்துவது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு, அதிக யூரிக் அமில அளவை வெளியேற்ற உதவுகிறது
செர்ரி சாறு
செர்ரிகளில் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இது யூரிக் அமில அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள் உடலில் வீக்கத்தைக் குறைத்து, இரத்தத்தில் யூரிக் அமில செறிவுகளைக் குறைக்க உதவுகிறது
இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அதிக யூரிக் அளவால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. இது உடலின் யூரிக் அமிலத்தை உடைத்து அதை நீக்குவதற்கு வழிவகுக்கிறது
கிரீன் டீ
கிரீன் டீ-யில் கேட்டசின்கள் நிறைந்துள்ளது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். இதை அருந்துவது யூரிக் அமில உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், யூரிக் அமிலத்தைத் திறம்பட வெளியேற்றுகிறது
மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் கலவை உள்ளது. இந்த அழற்சி எதிர்ப்புக் கலவை அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது கீல்வாதத்தின் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது