உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறுவது அவசியமாகும். இதில் சோடியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்
ஆலிவ்
ஆலிவ்களில் சோடியத்துடன், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும், ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளது. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
கடற்பாசி
கடல் சூழல் காரணமாக, கடற்பாசி ஆனது இயற்கையாகவே அதிக அளவு சோடியத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள அயோடின், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தைராய்டு மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
சோயா சாஸ்
இதில் புரோபயாடிக்குகள் மற்றும் செரிமானத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் காணப்படுகிறது. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது
காய்கறி ஊறுகாய்
காய்கறி ஊறுகாயில் அதிகளவிலான சோடியம் உள்ளது. இந்த ஊறுகாயில் புரோபயாடிக்குகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கவும் உதவுகிறது
சீஸ்
இதில் சோடியம் நிறைந்திருப்பதுடன், புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளும் உள்ளது. இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது