நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய புரச்சத்து நிறைந்த பழங்கள்

By Gowthami Subramani
23 Nov 2024, 17:26 IST

பெரும்பாலான பழங்களில் புரதம் குறைவாக இருப்பினும், சில பழங்கள் அதிக புரதச்சத்து கொண்டவையாக உள்ளது. இதில் அதிக புரதம் நிறைந்த ஆரோக்கியமான பழங்கள் சிலவற்றைக் காணலாம்

பலாப்பழம்

ஒரு கப் அளவிலான பலாப்பழம் சுமார் 3 கிராம் புரதத்தை வழங்குகிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது

கொய்யா

கொய்யாப்பழங்கள் புரதச்சத்துக்கு பெயர் பெற்றதாகும். இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. எனவே இது ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

ஆப்ரிகாட்ஸ்

ஒரு பாதாமி பழமானது சுமார் 0.5 கிராம் அளவிலான புரதத்தைக் கொண்டுள்ளது. மேலும் உலர்ந்த பாதாமி பழமும் புரதத்தின் அதிக செறிவை வழங்குகிறது

அவகேடோ

வெண்ணெய்ப்பழம் கிரீம் போன்ற அமைப்பு கொண்டதாகும். ஒரு கப் அளவிலான அவகேடோவில் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது

கிவி

ஒரு கப் அளவிலான கிவி பழம் சுமார் 2 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. இது வைட்டமின் சி நிறைந்ததாகவும், இதன் இயற்கையான நொதிகளுடன் செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் புரதம் நிறைந்த பழமாகும். மேலும், இதில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை விரைவான ஆற்றலை வழங்குகிறது