வைட்டமின் பி12 நமது நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைத்து நமது டிஎன்ஏ செல்களை உருவாக்குகிறது. இரத்தசோகையையும் தடுக்கிறது.
மனித உடலுக்கு தினமும் 2.4 mcg வைட்டமின் B12 தேவைப்படுகிறது. இறைச்சி போன்ற விலங்குகள் சார்ந்த உணவுகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் உள்ளது.
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் வயிற்றுப்போக்கு, தலைவலி, குமட்டல், வாந்தி, பலவீனம், கை கால்களில் கூச்ச உணர்வு ஏற்படலாம்.
விலங்குகள் சார்ந்த உணவில் அதிகபட்சமாக வைட்டமின் பி12 உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தாவர அடிப்படையிலான அல்லது பால் சார்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளனர்.
பால் மற்றும் சீஸ், பனீர், தயிர், செறிவூட்டப்பட்ட உணவு, காளான் ஆகியவை வைட்டமின் பி12-ன் நல்ல ஆதாரங்களாக உள்ளன.