அரிசி சாதம் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளைத் தந்தாலும், தினமும் இதை உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, வெள்ளை அரிசியை அதிக அளவில் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்
எடை அதிகரிப்பு
அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இவை எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, தினமும் அதிகளவில் சாப்பிடுவது எடையை அதிகரிக்கலாம்
இரத்த சர்க்கரை அதிகரிப்பு
அரிசியில் அதிகளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. அதாவது இவை இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்
இதய நோய் அபாயம்
சில ஆய்வுகளில் வெள்ளை அரிசியை அதிகம் உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், தினமும் அரிசி உட்கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது
வளர்சிதை மாற்ற நோய்க்குறி
அதிகமாக அரிசி சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்
தைராய்டு உள்ளவர்கள்
தைராய்டு நோயைக் கொண்டிருப்பவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது. இதற்கு அரிசியில் குளுட்டன் புரதம் இருப்பதே காரணமாகும். இவை தைராய்டு நிலைமையை மோசமாக்கலாம்
வயிற்று பிரச்சினைகள்
அதிகம் அரிசி உட்கொள்வது, குறிப்பாக இரவில் சாப்பிடுவது வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்
குறிப்பு
அரிசியை குறைந்த அளவு உட்கொள்ளலாம். மேலும், சில நேரங்களில் வெள்ளை அரிசிக்குப் பதிலாக பழுப்பு அரிசியைச் சாப்பிடுவது நன்மை பயக்கும். இரவில் அரிசி உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்