கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தர்பூசணி ஆகும். இது பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மஞ்சள் தர்பூசணி பற்றி தெரியுமா? இது சிவப்பு தர்பூசணியை விட அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது
மஞ்சள் தர்பூசணி ஊட்டச்சத்துக்கள்
இதில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. அது மட்டுமல்லாமல், மஞ்சள் தர்பூசணி அதிகளவு நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
நல்ல செரிமானத்திற்கு
இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள், ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்கிறது. இவை மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது
நீரேற்றமாக வைத்திருக்க
மஞ்சள் தர்பூசணி 90% க்கும் அதிகமான நீர்ச்சத்து கொண்ட பழமாகும். இதை உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது கோடைக்காலத்தில் சிறந்த தேர்வாகும்
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த
மஞ்சள் தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் வழிவகுக்கிறது
கண்களின் ஆரோக்கியத்திற்கு
மஞ்சள் தர்பூசணியில் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இவை வயதாகும்போது ஏற்படும் கண் பிரச்சினைகளின் அபாயத்தையும் குறைக்கிறது
வீக்கத்தைக் குறைப்பதற்கு
மஞ்சள் தர்பூசணியில் சிட்ருலின் உள்ளது. இது வீக்கம் மற்றும் தசைவலி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே இவை சருமத்தை நெகிழ்வாக வைத்திருக்கவும், இயற்கையாகவே பளபளப்பைத் தரவும் உதவுகிறது