வெங்காயத் தாள் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
22 Jun 2025, 21:19 IST

ஸ்பிரிங் ஆனியன் ஆனது சாலட்கள் மற்றும் சூப்களுக்கு ஒரு சுவையான கூடுதலாக மட்டுமல்லாமல், பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் ஸ்பிரிங் ஆனியன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

எடையிழப்புக்கு

ஸ்பிரிங் ஆனியன் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும், ஆரோக்கியமற்ற பசியைக் குறைக்கவும் மற்றும் சிறந்த வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இதில் அல்லிசின் மற்றும் குர்செடின் போன்ற சேர்மங்கள் உள்ளது. இவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த சேர்மங்கள் உடலில் சிறந்த இரத்த ஓட்டத்தை ஆதரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்த

வெங்காயத் தாள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் மென்மையான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும் உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இவை உடலை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, பருவகால மாற்றங்களில் இது மிகவும் நன்மை பயக்கும்

எலும்புகளை வலுப்படுத்த

இவை வைட்டமின் கே மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமானவை. இதன் வழக்கமான நுகர்வு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது

தசைபிடிப்பைக் குறைக்க

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை தசைகளை தளர்த்தவும், பிடிப்புகளைக் குறைக்கவும் உதவுகின்றன. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தசை பிடிப்புகளைத் தடுக்கலாம்

சரும ஆரோக்கியத்திற்கு

வெங்காயத் தாளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், சுருக்கங்கள் மற்றும் வறட்சி போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது