சம்மரில் எள் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
03 Apr 2025, 17:56 IST

எள்ளின் வெப்பத்தன்மை காரணமாக, இதை கோடைக்காலத்தில் தீங்கு விளைவிக்கும் எனக் கருதுகின்றனர். எனினும், கோடைக்காலத்தில் சரியான முறையில் எள் சாப்பிடுவது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் கோடைக்காலத்தில் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

எள்ளில் புரதம், நார்ச்சத்துக்கள், கலோரிகள், தாமிரம், மாங்கனீசு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு போன்றவை உள்ளது. இது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதில் கோடைக்காலத்தில் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் எள் எடுத்துக் கொள்ளலாம். இது பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் ஊக்குவிக்கவும் உதவுகிறது

எலும்புகளை வலுவாக்க

எள்ளில் அதிகளவிலான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கூறுகள் காணப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை பயக்கும்

வீக்கத்தைக் குறைக்க

எள் விதைகளை உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஒற்றை நிறைவுறா கொழுப்பு மற்றும் ஒமேகா-6 காணப்படுகின்றன. இவை உடலில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

எள்ளை சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை மிகவும் ஆரோக்கியமாக மற்றூம் ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. இதை பல்வேறு ஃபேஸ்பேக்குகளில் பயன்படுத்தலாம். இதை சருமத்திற்குப் பயன்படுத்துவது கறைகள் மற்றும் வறட்சியைப் போக்க உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

எள்ளில் டைரோசின் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது. இது செரோடோனின் செயல்பாட்டுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. செரடோனின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

சாப்பிடும் முறை

கோடைக்காலத்தில் எள்ளின் வெப்பம் ஆரோக்கியத்தைப் பாதிக்காமல் இருக்க, எள்ளை எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும். எள்ளை ஊறவைத்து சாப்பிடலாம். இது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், உள்ளிருந்து குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. இது தவிர, எள்ளை ஸ்மூத்திகள் அல்லது பழச்சாறுகளில் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலம்