ஓமம் தண்ணீர் குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
24 Jun 2025, 20:19 IST

கேரம் விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளாகும். இவை உணவுகளுக்கு ஒரு காரமான சுவையைச் சேர்ப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்த விதைகளை ஊறவைத்த நீர் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்

ஊட்டச்சத்துக்கள்

கேரம் விதைகள் என்றழைக்கப்படும் அஜ்வைனில் கால்சியம், மக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

கேரம் விதைகள் அதன் செரிமான பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றவையாகும். இந்த விதைகளின் நீரைக் குடிப்பது அஜீரணம், வீக்கம் மற்றும் வாய்வு பிரச்சனையைப் போக்க உதவுகிறது. மேலும் இது இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டவும், உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது

எடை மேலாண்மைக்கு

கேரம் விதைகளின் நீர் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இதை சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க எடையிழப்பைப் பெறலாம்

வீக்கத்தைக் குறைக்க

கேரம் விதைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கீல்வாதம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கேரம் விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றன. இவை உடல் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

சுவாச பிரச்சனைகளைப் போக்க

கேரம் விதைகளில் உள்ள தைமால் போன்ற சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சுவாசப் பிரச்சினைகளைப் போக்க உதவுகின்றன. இந்த நீரைக் குடிப்பது சளி, இருமல், நெரிசல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது