கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு குவிந்து, அதன் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு நிலையே கொழுப்பு கல்லீரல் நோய் ஆகும். எனினும், வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் கொழுப்பு கல்லீரலை குணப்படுத்தலாம். இதில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளைக் காணலாம்
வால்நட்ஸ்
அக்ரூட் பருப்புகள் அல்லது வால்நட்ஸில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் நொதிகளின் அளவை மேம்படுத்த உதவுகிறது
பூண்டு
பூண்டு உட்கொள்வது கல்லீரல் நொதிகளை செயல்படுத்துகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை கல்லீரல் நொதிகளின் அளவையும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன் மற்றும் சார்டின் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவுகிறது
பச்சை இலை காய்கறிகள்
கேல், பசலைக் கீரை மற்றும் அருகுலா போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை கல்லீரலை நச்சு நீக்கி, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது
குறிப்பு
கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபடுவதற்கு உணவின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பதும் அவசியமாகும். எனினும், புதிய உணவுமுறையைக் கையாள்வதற்கு முன்பாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்