உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் சோர்வு, பலவீனம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் விதைகள் சிலவற்றைக் காணலாம்
ஆளி விதைகள்
ஆளி விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கணிசமான அளவு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகளை எடுத்துக் கொள்வது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது
குயினோவா
இது இரும்புச்சத்து நிறைந்த மூலமாகும். ஒரு கப் அளவிலான சமைத்த குயினோவா சுமார் 2.8 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது
சியா விதைகள்
1 அவுன்ஸ் அளவிலான சியா விதைகளில் சுமார் 1.6 மிகி இரும்புச்சத்தைக் கொண்டுள்ளது. இந்த விதைகள் உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்கிறது
எள் விதைகள்
இது உணவுகளுக்கு சுவையைச் சேர்ப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஒரு தேக்கரண்டி எள் விதைகளில் சுமார் 1.3 மிகி அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அளவை அதிகரிக்கிறது
பூசணி விதைகள்
இந்த விதைகள் இரும்புச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். ஒரு அவுன்ஸ் அளவு பூசணி விதைகளில் தோராயமாக 2.5 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து உள்ளது. இதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
சூரியகாந்தி விதைகள்
ஒரு அவுன்ஸ் சூரியகாந்தி விதைகளில் தோராயமாக 1.4 மிகி அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் சிறந்த விதைகளில் ஒன்றாகும்