யாருக்குத்தான் இனிப்பு என்றால் பிடிக்காது. ஆனால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இது உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் உட்பட பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது
ஆரோக்கியமான மாற்றுகள்
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக சில ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இது உணவு முறையை இனிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது
தேங்காய் சர்க்கரை
இது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும் இனிப்பு வகையாகும். மேலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது
வெல்லம்
இயற்கையாக கிடைக்கும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் இரும்பு மற்றும் பல்வேறு தாதுக்கள் நிறைந்ததாகும். எனவே இது சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது
பேரீச்சம்பழம்
இது இயற்கையான இனிப்பு சுவையைத் தரக்கூடியதாகும். இதில் இரும்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக செயல்படக்கூடும்
மேப்பிள் சிரப்
மேப்பிள் மரத்தின் சாற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த இயற்கை சிரப் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் இரத்த சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும் ஒரு கலவை நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும்
ஸ்டீவியா
இது கலோரிகள் இல்லாத ஒரு தாவரத்திலிருந்து பெறப்பட்ட இனிப்பு சுவை கொண்ட சாறு ஆகும். இந்த பூஜ்ஜிய கலோரி இனிப்பானது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது
தேன்
இது தாதுக்கள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மற்றும் அதன் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது