ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகளால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகி பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் கெட்டை கொழுப்பைக் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பழங்களைக் காணலாம்
ஆப்பிள்
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
திராட்சை
திராட்சைகள் கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் அளவுகளில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைக்கிறது. எனவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க திராட்சையை எடுத்துக் கொள்ளலாம்
கொய்யா
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யா இலைச்சாறு கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது
ஆம்லா
அதிக கொழுப்பு மற்றும் அசாதாரண இரத்த கொழுப்பு அளவுகள் கொண்ட நபர்களுக்கு ஆம்லா ஒரு சிறந்த தேர்வாகும். இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது
ஆரஞ்சு
இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்றவை எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது
அவகேடோ
அவகேடோ பழங்கள் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். மேலும் இது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறதுs