மழைக்காலத்தில் பலரும் பல்வேறு நோய்த்தொற்றுகளைச் சந்திக்கின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவை மேற்கொள்வது அவசியமாகும். இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்
ஆரோக்கியமான உணவுமுறை
பருவகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைக்க சில உணவுமுறை மாற்றங்களை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பருவகால நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது
பிளம்ஸ்
பிளம்ஸ் பழத்தில் தாமிரம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
பீச் ஃபுரூட்
இது நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்தளவு கலோரி கொண்ட பழமாகும். வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கரோட்டின் நிறைந்துள்ளது. இது பார்வைக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க உதவுகிறது
தண்ணீர் கீரை
மழைக்காலத்தில் இலை கீரைகளைத் தவிர்ப்பது நன்மை எனினும், தண்ணீர் கீரை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இது கல்மி சாக் என்றழைக்கப்படும் மழைக்காலத்தில் வளரும் ஒரு காட்டு வகை கீரையாகும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
சுரைக்காய்
இதில் குறைந்த கலோரிகளும், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது
நாவல்பழம்
இந்த பழம் நார்ச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் சிறந்த பழமாகும். இது உடலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சியைத் தருகிறது. இவை இரத்தத்தை சுத்திகரித்து ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது