சிலர் சர்க்கரை உட்கொள்வதை அதிகமாக விரும்புவர். ஆனால் சில உணவுகள் இயற்கையாகவே சர்க்கரை பசியைக் குறைக்கவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறது. இதில் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளைக் காணலாம்
பழங்கள்
பெர்ரி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்ற புதிய பழங்களை எடுத்துக் கொள்வது இயற்கையாகவே இனிப்பு மற்றும் நார்ச்சத்துக்களைத் தருகிறது. இந்த நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கிறது
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரை பசிக்கு சிறந்த மாற்றாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளில் நிறைந்துள்ளது. இது நீண்டகால ஆற்றலை வழங்கவும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது
டார்க் சாக்லேட்
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் இது கசப்பான-இனிப்பு சுவை கொண்டதாகும். இது சர்க்கரை பசியைக் குறைக்கவும், ஒரு இனிமையான பசியை திருப்திப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டி, நன்றாக உணர வைக்கிறது
தேங்காய் தண்ணீர்
நீரிழப்பு சில நேரங்களில் பசியாக தவறாக கருதப்படுகிறது. இந்நிலையில் தேங்காய் தண்ணீர் அருந்துவது உடலை நீரேற்றமாக வைக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இது இயற்கையான எலக்ட்ரோலைட் பானமாகும்
சிட்ரஸ் பழங்கள்
திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இனிப்பு பசியை குறைக்கவும், உடலில் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும் உதவுகிறது
பேரிச்சம்பழம்
இது இனிப்புக்கான சிறந்த மற்றும் இயற்கையான மூலமாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதன் செறிவான இனிப்பு, சர்க்கரை சேர்க்காமல் பசியைப் பூர்த்தி செய்கிறது