வைட்டமின் டி அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
14 May 2025, 15:50 IST

உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டியும் அடங்கும். இதன் அளவு குறைவாக இருப்பதால், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். வைட்டமின் டி-யை சூரிய ஒளியின் மூல மட்டுமல்லாமல், சில உணவுகளின் மூலம் பெறலாம். இதில் வைட்டமின் டி அதிகரிக்க உதவும் உணவுகளைக் காணலாம்

காளான்கள்

சூரிய ஒளி அல்லது புற ஊதா ஒளியில் வெளிப்படும் காளான்கள் ஆனது வைட்டமின் டி2-ன் இயற்கையான தாவர அடிப்படையிலான மூலமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் டியைப் பெற உதவும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சரியான வழியாகும்

சீஸ்

சில சீஸ்களில் சிறிய அளவிலான வைட்டமின் டி ஊட்டசத்துக்கள் காணப்படுகிறது. எனினும், இவை நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். எனவே சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக இதை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் போதுமான வைட்டமின் டியைப் பெறலாம்

முட்டையின் மஞ்சள் கரு

வைட்டமின் டியின் விரைவான, பல்துறை மற்றும் சிறந்த மூலமாக முட்டைகள் அமைகிறது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரமாகும்

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்புள்ள மீன்களில் அதிகளவிலான வைட்டமின் டி 3, ஒமேகா-3 மற்றும் புரதம் போன்றவை உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிலான மீனில் இருந்து போதுமான வைட்டமின் டியை பெற முடியும். இதன் நுகர்வு எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

காட் லிவர் ஆயில்

இதில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்