குடல் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய புளித்த உணவுகள்

By Gowthami Subramani
06 Feb 2025, 19:52 IST

புளித்த உணவுகள் உட்கொள்வது குடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் குடல் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய புளித்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்

தயிர்

லாக்டோபாகிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம்  போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர், குடல் தாவர சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

கிம்ச்சி

இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள புளித்த உணவுகளில் ஒன்றாகும். கொரிய உணவான கிம்ச்சியானது புளித்த காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது

கேஃபிர்

இது பல்வேறு வகையான புரோபயாடிக்குகளைக் கொண்ட ஒரு புளித்த பால் பானமாகும். இது குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

மிசோ

இது புளித்த சோயாபீனிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பேஸ்ட் ஆகும். இந்த புளித்த உணவில் வைட்டமின் கே, தாமிரம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை உள்ளது. இதில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

புளித்த ஊறுகாய்

இயற்கையாகவே புளித்த ஊறுகாய் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல புளித்த உணவுகளில் ஒன்றாகும். இதில் உள்ள புரோபாயடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

இட்லி மற்றும் தோசை மாவு

குடல் ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய இந்திய புளித்த உணவுகளில் இட்லி, தோசை சிறந்த தேர்வாகும். இதில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் செரிமானத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்