சீக்கிரம் செரிமானம் அடைய இந்த 6 ட்ரிங்ஸ் குடிங்க

By Gowthami Subramani
04 Jun 2025, 21:20 IST

ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியமாகும். வீக்கத்தைக் குறைக்கவும், குடலை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் சில ஆரோக்கியமான இயற்கை பானங்கள் உதவுகிறது. இதில் செரிமானத்திற்கு உதவும் பானங்கள் சிலவற்றைக் காணலாம்

இஞ்சி தேநீர்

இது அஜீரணம், குமட்டல் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகும். இது செரிமானத்தைத் தூண்டவும், வயிறு மற்றும் குடல் வழியாக உணவின் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

எலுமிச்சை நீர்

இது செரிமான அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உணவை உடைக்க எளிதாக்குகிறது. எனவே காலையில் சூடான எலுமிச்சை நீரைக் குடிப்பது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது

புரோபயாடிக் பானங்கள்

கேஃபிர், கொம்புச்சா, தயிர் பானங்கள் போன்ற புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், செரிமான அமைப்பை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது

சியா விதை பானம்

பொதுவாக சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது செரிமானப் பாதையை சுத்தமாக வைத்திருக்கவும், சீரான செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

ப்ரூன் ஜூஸ்

கொடிமுந்திரி சாறு ஒரு இயற்கை மலமிளக்கியாக அமைகிறது. இதில் உள்ள சர்பிடால் மற்றும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை எளிதாக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது

ஆளிவிதை பானம்

ஆளி விதைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதைத் தண்ணீரில் ஊறவைத்து குடிப்பது மலச்சிக்கலைப் போக்குவதுடன், ஆரோக்கியமான குடலை ஆதரிக்கிறது