குடல் ஆரோக்கியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மனநிலை வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியதாகும். எனவே சரியான உணவுடன் நாளைத் தொடங்குவது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் இது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது
காலை உணவுகள்
காலை நேரத்தில் நாம் சாப்பிடக் கூடிய உணவுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கிறது. இதில் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவான நுண்ணுயிரியலை வளர்க்கக் கூடிய சில உணவுகளைக் காணலாம்
வாழைப்பழங்கள்
இது நமது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இவை பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்த்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இவை நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. எனவே காலை உணவுக்குப் பிறகு அசௌகரியம் ஏற்பட்டால், வாழைப்பழங்கள் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது
சியா விதைகள்
சியா விதைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை தண்ணீர் அல்லது பாலில் இரவு முழுவதும் ஊறவைப்பது குடலியக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய ஜெல்லி போன்ற அமைப்பை உருவாக்குகிறது
ஆளி விதைகளுடன் சமைத்த ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் நார்ச்சத்துக்கள் குடல் நுண்ணுயிரிகளை வளர்க்கிறது. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைத்த ஆளி விதைகளைச் சேர்க்கலாம். இவை வீக்கத்தைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது
தேனுடன் கூடிய கிரேக்க தயிர்
கிரேக்க தயிர் புரோபயாடிக்குகள் மற்றும் புரதம் நிறைந்ததாகும். இது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதில் தேன் சேர்ப்பது கூடுதல் நன்மை பயக்கும்
குறிப்பு
காலை உணவாக இது போன்ற வெவ்வேறு உணவுகளைச் சாப்பிட்ட பிறகு உடல் எப்படி உணர்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் உடலின் தேவைகளுக்கு ஏற்ப சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குழப்பம் இருப்பின், ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகலாம்