வெள்ளை பிரட்டிற்கு பதிலாக இவற்றை முயற்சித்துப் பாருங்கள்!
By Kanimozhi Pannerselvam
22 Dec 2023, 19:33 IST
கிளவுட் பிரட்
பெயருக்கு ஏற்றார் போல் பஞ்சு போன்ற ரொட்டியான இது, ஈஸ்ட் இல்லாமல்
காலிஃபிளவர் பிரட்
காலிபிளவர் மற்றும் அரைத்த பாதாம் கொண்டு தயாரிக்கப்படும் மாவில் இருந்து இந்த ரொட்டி தயாரிக்கப்படுகிறது. மைதா மாவில் தயாரிக்கப்படும் பிரட்டிற்கு சிறந்த மாற்றாக மட்டுமின்றி, பீட்சா க்ரஸ்ட்டாகவும் இதனை பயன்படுத்தலாம்.
மதிய உணவு நேர சாலட் ஆகியவற்றிற்கு சிறந்த துணையாக, கிளாசிக் கார்ன்பிரட்டை முயற்சிக்கலாம். சோள மாவு, சிறிதளவு சில்லி ப்ளக்ஸ் சேர்த்து எளிதாகவும், சுவையாகவும் இதனை வீட்டிலேயே செய்யலாம்.
ஹோம் மேட் பிரட்
கடைகளில் வாங்கும் ஆர்கானிக் பிரட்களில் கூட கலப்படம் இருக்க வாய்ப்புண்டு. எனவே வீட்டிலேயே உங்களுக்கான சொந்த பிரட்டை தயாரிப்பது நல்லது. புளித்த பிரட், முழு தானிய பிரட், கோதுமை பிரட் என ஆரோக்கியமான வகைகளை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
லெட்யூஸ் கீரை
கீரை ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சாண்ட்விச், ரோல் போன்றவற்றை செய்ய விரும்பினால் அதற்கு பிரட்டிற்கு பதிலாக லெட்யூஸ் கீரைகளின் இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.