தினமும் 30 நிமிடம் வாக்கிங் செல்வது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
16 Nov 2024, 11:24 IST

தினந்தோறும் நடைபயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இது தவிர வேறு சில ஆரோக்கிய நன்மைகளையும் நடைபயிற்சி செய்வதன் மூலம் பெறலாம்.

நீரிழவு நோய்

காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதால் நீரிழவு நோயைக் கட்டுப்படுத்தலாம். எனவே நீரிழவு நோயாளிகள் தினசரி நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதய நோய்

நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கலாம். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மனச்சோர்வு

இன்றைய வாழ்க்கையில் மனச்சோர்வு ஒரு பொதுவான பிரச்சனையாகும். தினந்தோறும் நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.

நினைவாற்றல் மேம்பாடு

காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது மனதிற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தினமும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். இவை நோய்களை எதிர்த்துப் போராடுவதுடன், உடலுக்கு வலிமை தருகிறது.

ஆழ்ந்த உறக்கம்

தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. இது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.