அடேங்கப்பா வடிகஞ்சி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
29 May 2025, 20:45 IST

நம்மில் பலருக்கு சாதம் வடித்த நீரை குடிக்கும் பழக்கம் இருக்கும். அது, ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உடலில் உள்ள பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தது

இதில் மாவுச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, மெக்னீசியம், பொட்டாசியம், அயோடின், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

ஆற்றல் ஊக்கி

சாதம் வடித்த நீரில் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நல்ல அளவில் காணப்படுகின்றன. எனவே தினமும் காலையில் 1 கிளாஸ் அரிசி தண்ணீரை குடிப்பது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

குழந்தை உணவு

குழந்தைகளுக்கு பெரும்பாலும் நாம் திரவ உணவுகளை மட்டுமே கொடுப்போம். அந்தவகையில், கைக்குழந்தைகளுக்கு சாதம் வடித்த நீர் மிகவும் நல்லது. இவை எளிதில் ஜீரணமாகும்.

சரும பராமரிப்பு

தோல் பராமரிப்புக்கும் சோறு வடித்த தண்ணீர் உதவுகிறது. இது முகத்தில் உள்ள கறைகளை அகற்றவும் திறந்த துளைகளை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு அரிசி நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.

சிறந்த செரிமானம்

அரிசி நீரில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் மூலம் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். நார்ச்சத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

நீரிழப்பு

சோறு வடித்த நீரை குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

ஆடைகளுக்கு

காலம் காலமாக ஆடைகளை வடவடப்பாக வைக்க வடி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது ஆடைகளின் ஆயுளை நீட்டிக்கும். மேலும், புதிது போல காட்டும்.

வைட்டமின் B12

வைட்டமின் B12 பற்றாக்குறை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல ஆதாரமாக அமைகிறது. குறிப்பாக சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு.