சம்மர்ல உடம்ப கூலா வெச்சிக்க இந்த காயை சாப்பிடுங்க

By Gowthami Subramani
25 Apr 2024, 08:02 IST

கோடைக்காலத்தில் சுரைக்காய் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த வெப்பக் காலத்தில் உணவில் சுரைக்காயைச் சேர்ப்பது என்ன பலன்களைத் தரும் தெரியுமா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

சீமை சுரைக்காயில் வைட்டமின் ஏ சி, மற்றும் கே போன்றவை உள்ளது. இதனுடன் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் மக்னீசியம் போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

நீரேற்றமிக்க

சுரைக்காய் 95%-ற்கும் அதிகமான நீர்ச்சத்துக்களைக் கொண்டதாகும். எனவே கோடை வெப்பத்தின் போது ஏற்படும் நீரிழப்பு பிரச்சனைக்கு இது சிறந்த தேர்வாகும்

குறைந்த கலோரிகள்

சீமை சுரைக்காய் கலோரிகள் குறைவாகவும், கொழுப்பு இல்லாததாகவும் அமைகிறது. இது கோடை கால உடல் எடை இழப்புக்கு ஏற்றதாகும்

செரிமான ஆரோக்கியத்திற்கு

சுரைக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டதாகும். இது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது

குளிரூட்டும் பண்புகள்

சீமை சுரைக்காய் உடலுக்கு இயற்கையாகவே குளிரூட்டும் பண்புகளைத் தருகிறது. இது கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் உணவுகளில் ஒன்றாக அமைகிறது

எடையிழப்புக்கு

சுரைக்காயில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்வது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தருகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

இந்த காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதுடன், கோடைக்கால தொற்றுநோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

சுரைக்காயில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது