பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!

By Devaki Jeganathan
07 May 2025, 12:50 IST

பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின்-ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், புரதம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால். தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

எடை இழக்க

தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உடலுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் பல மணி நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

வலுவான எலும்பு

பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

சிறந்த செரிமானம்

பாதாமில் நார்ச்சத்து உள்ளது. அதன் நுகர்வு செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

நினைவாற்றல் மேம்படும்

ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரித்து மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

சரும பளபளப்பு

பாதாமில் வைட்டமின்-ஈ, ஒமேகா-3 போன்றவை உள்ளன. இவை சருமப் பொலிவுக்குத் தேவையான கூறுகள். இதனை உட்கொள்வதால் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கொலஸ்ட்ரால் குறைக்க

ஊறவைத்த பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இரத்த சர்க்கரை

பாதாமில் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனை ஊறவைத்து தினமும் சாப்பிடுங்கள்.