உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்கள் பல்வேறு நன்மைகளைத் தரும் என்பது நாம் அறிந்ததே. சில பூக்களும் உடல் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது என்பது தெரியுமா? ஆம். சங்கு பூ தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்
முடி உதிர்வு பிரச்சனைக்கு
சங்கு பூ மூலிகை முன்கூட்டிய நரை மற்றும் வழுக்கை போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்க்கால்களை ஊட்டமளிக்கிறது
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைக்கு தாவர அடிப்படையிலான உணவுகளை இணைத்து செயல்பாட்டு உணவுகளை உருவாக்க சங்கு பூ உதவுகிறது
உயர் இரத்த அழுத்தத்திற்கு
சங்கு பூ டையூரிடிக் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நீரின் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
சங்கு பூ விதைகள் மற்றும் வேர்களின் சாறு இரண்டிலும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நேர்மறையான விளைவுகளைத் தருகிறது
காய்ச்சலுக்கு மருந்தாக
சங்கு பூவை எடுத்துக் கொள்வது தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்தி காய்ச்சலைக் குறைக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
வீக்கம் சார்ந்த பிரச்சனைக்கு
இந்த பூவில் உள்ள எத்தனாலிக் சாறு, ஆஸ்துமா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது
மாதவிடாய் பிரச்சனைக்கு
அதிகளவு மற்றும் அடிக்கடி மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் விதமாக சங்கு பூ உதவுகிறது. இதன் இலைகளைக் கழுவி சுத்தம் செய்து, இலைச்சாற்றை மிஸ்ரி மற்றும் தண்ணீருடன் சில நாள்கள் குடிக்கலாம்