அரிசி தண்ணீரில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

By Gowthami Subramani
15 Apr 2024, 12:49 IST

சருமம் மற்றும் முடிக்கு அரிசி நீர் தரும் நன்மைகளை நாம் அறிந்த ஒன்றே. ஆனால், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி நீரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமானத்திற்கு உதவ

அரிசி நீரில் உள்ள நார்ச்சத்துக்கள், ஸ்டார்ட் போன்றவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது வீக்கம், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை அகற்றுவதுடன், குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

சரும பொலிவுக்கு

அரிசி நீரில் ஃபெரூலிக் அமிலம், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன், பளபளப்பான நிறத்தைத் தருகிறது

முடி வளர்ச்சிக்கு

அரிசி நீரில் உள்ள வைட்டமின் பி, அமினோ அமிலங்கள் போன்றவை முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

நீரேற்றமாக வைக்க

அரிசி நீர் அதிகளவு நீராதாரம் மிகுந்ததாகும். இது உடலின் நீரேற்ற அளவை பராமரிக்கவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா குளுக்கோன்கள் போன்றவை உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரித்து, உடலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது