பனங்கிழங்கு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?

By Gowthami Subramani
09 Jan 2024, 08:49 IST

பனைமரத்தில் இருந்து பனம்பழத்தை குழியில் புதைத்து பனங்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பனங்கிழங்கின் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது

ஊட்டச்சத்துக்கள்

இதில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன

உடல் எடை அதிகரிக்க

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் பனங்கிழங்கை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் அதிகரிக்கலாம்

இரத்த சோகை குணமாக

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் இரத்த சோகையை எளிதில் குணப்படுத்த உதவுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் பனங்கிழங்கை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்

சர்க்கரை நோய் குணமாக

பனங்கிழங்கில் உள்ள சில வேதிப்பொருள்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள பனங்கிழங்கு உதவுகிறது

மலச்சிக்கல் குணமாக

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையைக் குணமாக்க உதவுகிறது. மேலும், இவை செரிமானத்தை சீராக்க உதவுகிறது

கர்ப்பப்பை வலுப்பெற

பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் பனங்கிழங்கை எடுத்துக் கொள்வது கருப்பையை வலுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் பனங்கிழங்கு பவுடரை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடலாம். இவை உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைக்க உதவுகிறது

எப்படி சாப்பிடுவது?

நீரில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பனங்கிழங்கை அவிழ்த்து சாப்பிடலாம் அல்லது அவிழ்த்த கிழங்கை காயவைத்து அரைத்து பவுடர் செய்து பசும்பாலுடன் சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிடலாம்

குறிப்பு

பனங்கிழங்கில் பித்தம் சிறிது அதிகமாக இருக்கும். எனவே பனங்கிழங்கை சாப்பிட்ட பிறகு ஐந்து மிளகு மென்று சாப்பிடலாம். எனினும் பனங்கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு வலிமை தருவதுடன், ஆரோக்கியத்தைத் தரும்