பனங்கற்கண்டு
பனை வெல்லத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டில் இரும்பு, பொட்டாசியம், ஜிங்க், வைட்டமின் பி1, பி2, மற்றும் பி3 போன்றவை நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
இதய நோய்
பனங்கற்கண்டு சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதய நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்
மார்புச்சளி நீங்க
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்று மார்புச் சளி. இதிலிருந்து விடுபட பாலில் பனங்கற்கண்டைச் சேர்த்து காய்ச்சி குடித்து வரலாம்
காசநோய்
மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற கிருமியால் ஏற்படும் காசநோயிலிருந்து விடுபட பனங்கற்கண்டு உதவுகிறது. மேலும் இது சளி மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது
வயிற்றுப்புண் குணமாக
பனங்கற்கண்டில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் வயிற்றுப்புண் பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. மேலும், கருவுற்ற பெண்களுக்கு சிறந்த வலி நிவாரணியாகவும பனங்கற்கண்டு செயல்படுகிறது
சர்க்கரை அளவை சீராக்க
இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது
ஆற்றலைத் தர
பனங்கற்கண்டி உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் ஆற்றல் நிலையை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது
பற்களின் ஆரோக்கியத்திற்கு
பனங்கற்கண்டில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது
சரும பிரச்சனைக்கு
பனங்கற்கண்டில் உள்ள இரும்புச்சத்துக்கள், உடலில் பித்தத்தைப் போக்க உதவுகிறது. மேலும் சொறி, சிரங்கு போன்ற சருமம் தொடர்பான வியாதிகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது