பல ஆண்டுகளாக, மருத்துவம், தொழில்துறை என பல்வேறு துறைகளில் பனை ஓலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூரை பொருள்கள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பனை இலை உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது
ஊட்டச்சத்துகள்
பனை இலைகளில் ஸ்டார்ச், வைட்டமின் சி, கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. இவை காய்கறிகள், பழங்களில் இருப்பதை விட அதிகமாகும்
முடி உதிர்வு பிரச்சனைக்கு
பனை இலைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை முடி உதிர்வு பிரச்சனைக்கு உதவுகிறது. மேலும் வீக்கத்துடன் தொடர்புடைய சிவத்தல், வலியைக் குறைக்க உதவுகிறது
தோல் நோய்த்தொற்று பிரச்சனை
தோல் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பனை இலை சிறந்த மற்றும் இயற்கையான தீர்வாகும். பொதுவாக தோல் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு பனை ஓலைப் பொடி பயன்படுத்தப்படுகிறது
காது நோய்த்தொற்றுக்கு
சைனசிடிஸ், இடைச்செவியழற்சி, நிம்மோனியா போன்ற காது தொற்றுக்களுக்கு பனை இலைகள் சிகிச்சை அளிக்கிறது. இவை குமட்டல் அல்லது தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் காது நோய்த்தொற்றுக்களுக்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவுகிறது
கர்ப்பிணி பெண்களுக்கு
பனை இலைகள் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த இயற்கையான மருந்துகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்க உதவும் இரும்புச்சத்துக்களை பனை இலை கொண்டுள்ளது
வலியைக் குறைக்க
மனச்சோர்வு, அழுத்தம் போன்றவற்றால் சிலர் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளை சந்திப்பர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஈரமான பனை ஓலையை பயன்படுத்தலாம்
இயற்கையான சன்ஸ்கிரீன்
பனை ஓலைச் சாற்றில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளன. இவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது
காயங்களுக்கு மருந்தாக
பனை ஓலைகளை நேரடியாக காயத்தின் மீது தடவுவது அல்லது இலைகளை பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இது எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் விரைவாகக் காயத்தைக் குணப்படுத்த உதவுகிறது